சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள 2 வேகத்தடைகளில் வர்ணம் பூசவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடைகளில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் வேகத்தடைகளில் வர்ணம் பூசவேண்டியது அவசியம்.