குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-11-27 10:22 GMT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி செங்கரையூர் வழி பூண்டி மாதா கோவில் சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்