கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து கண்ணுகாரன் கொட்டாய், நாட்டான் கொட்டாய் ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், அவதானப்பட்டி, கிருஷ்ணகிரி.
-பெருமாள், அவதானப்பட்டி, கிருஷ்ணகிரி.