கோவை பி.என்.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக கோகுலம் காலனி சந்திப்பில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் சாலையோரத்தில் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையில் வேகத்தடை அமைக்கவும், போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், குப்பை கூளங்களை அகற்றி நடைபாதை அமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.