சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-20 16:17 GMT

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 37-வது வார்டு பெரியப்பட்டி பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 20 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் வீடுகள் கட்டி அவர்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் அங்கு சாலை வசதியோ, மழைநீர் வடிகால் வசதியோ இல்லை. இதனால் மழை காலங்களில் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே மழைநீர் வடிகால் வசதியுடன் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயந்தி, பெரியப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்