சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மதுரை-தொண்டி மெயின் ேராட்டிலிருந்து மோர்குளி, அய்யனார் குளம் கிராமங்கள் வழியாக நடராஜபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.