விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்தும், மரக்கிளைகள் உரசியபடியும் காணப்படுகிறது. பல சாலைகள் மண் ரோடாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. மேலும் இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.