நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து பரமத்தி சாலை செல்ல அம்மா உணவகம் அருகே இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பெய்த தொடர்மழைக்கு இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.