குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-16 10:36 GMT

கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரியில் இருந்து தேனாடு கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்