குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-13 11:17 GMT

தஞ்சை-நாகை சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் வாரசந்தை இடம் முதல் வண்டிக்கார தெரு வரை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் இருப்பது தெரியாததால் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்