மணிமுத்தாறு அணை கீழ கேம்ப்- மேல கேம்ப் இடையே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் மணிமுத்தாறு அணை, சிறப்பு காவல்படை முகாம் போன்றவற்றுக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.