நாகர்கோவில் வடசேரியில் இருந்து பூதப்பாண்டிக்கு செல்லும் பாலமோர்சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதானல், பள்ளி மாணவ-மாணவிகள், நோயாளிகளை ஏற்றி வரும் ஆஸ்புலன்ஸ் வாகனங்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்,நாராயணசாமி, பூதப்பாண்டி.