தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் வாகைகுளத்தை அடுத்த வர்த்தகரெட்டிபட்டி சர்வீஸ் ரோடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்து சிக்னல், விபத்து அபாய எச்சரிக்கை பலகை, ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் போன்றவை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.