கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையில் செல்லும் மாணவர்களும், இப்பகுதியில் குடியிருப்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிஷோர், பர்கூர், கிருஷ்ணகிரி.