அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் கரட்டூர் மேடு பகுதியில் ரோட்டின் நடுவே பெரியகுழி உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி செல்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆபத்தான குழியால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ரோட்டின் நடுவே உள்ள ஆபத்தான குழியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.