கும்பகோணம் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையில் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையின் வழியாக பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.