ஒரத்தநாடு தாலுகா ஆவிடநல்லவிஜயபுரம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அந்த பகுதியில் கல்லறை உள்ளது. ஆனால் கல்லறைக்கு செல்ல போதிய வழி இல்லாததால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கல்லறைக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுப்பதோடு, செல்ல பாதை வசதி அமைத்து தரவேண்டும்.