சேறும், சகதியுமாக மாறிய தார்சாலை

Update: 2022-11-02 16:37 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து மணவாரனப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. சாலையில் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் சேற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாலா, நாச்சிகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்