கோவில்பட்டி நகராட்சி 9-வது வார்டு மெயின் ரோட்டில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடவில்லை. இதனால் தற்போது பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. எனவே, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.