பெரியகுளம் நகரில் உள்ள சில தெருக்களில் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறிவிடுகிறது. எனவே சாலைகளை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.