பாப்பாக்குடி பஞ்சாயத்து குமாரசாமிபுரம் 4-வது வார்டு மேட்டு தெருவில் சிறிது தூரத்துக்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதியில் சாலை அமைக்காததால், தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, தெரு முழுவதும் முறையாக சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.