நாமக்கல் இருந்து சேலம் செல்லும் சாலையில் முதலைப்பட்டியில் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் உள்ள சாலை சமமாக இல்லாததால், மழைக்காலங்களில் அதிக மழைநீர் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே அங்கு சாலையை சமப்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?