நாமக்கல் அருகே உள்ள கொண்டநாயக்கன்பட்டியில் இருந்து தாதம்பட்டி வரை 3 கி.மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.