கோவை செல்வபுரம் வடக்கு மற்றும் தெற்கு சாலைகள் சிவாலயா சந்திப்பில் இருந்து மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து செல்லும் நிலை நீடிக்கிறது. எனவே அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.