நாகர்கோவில், டபிள்யு.சி.சி. கல்லூரி அருகில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனத்தில் செல்லும் மாணவிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனுஷ் குமார், இடலாக்குடி.