மூடப்படாத குழிகள்

Update: 2022-10-26 16:21 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்னி மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இந்தநிலையில் குழாய் சீரமைக்கும் பணிகள் முடிந்தும் இதுவரை அந்த குழி மூடாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கோவிலுக்கு வருகின்றவர்களும், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்