நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வலையபட்டி வள்ளுவர் நகரில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படாமல் இருந்த ஒரு வட்டக்கிணறு மூடப்பட்டது. இந்தநிலையில் சில மாதங்களில் மூடப்பட்ட கிணறு வட்டமான அளவில் பெரிய பள்ளம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் குழந்தைகள், கால்நடைகள், இருசக்கர வாகனங்கள், செல்லும் போது தவறி விழுந்து விடுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றை முழுமையாக மூட வேண்டும்.
-கவின், வலையபட்டி, நாமக்கல்.