கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில், முகுலபள்ளி கேட் அருகே நடுரோட்டில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பள்ளம் இருப்பதை தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.சீனிவாசன், முகுலபள்ளி, கிருஷ்ணகிரி.