கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே எச்சம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எச்சம்பட்டி, குரும்பட்டி, ஜோடுஆலமரம், ஜீவாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தர்மபுரி செல்லும் மெயின்ரோட்டை கடந்து தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-முருகன், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.