பந்தலூர் அருகே பிதிர்காடு பகுதியல் இருந்து பதினெட்டு குன்னு பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆங்காங்கே குழி ஏற்பட்டு உள்ளதால், வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.