சேதமான சாலை சீரமைக்கப்படுமா ?

Update: 2022-10-26 15:22 GMT

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள் பூங்கா சாலை வழியாக சேலம், ஈரோடு, கோவை போன்ற நகரங்களுக்கு செல்கின்றன. இதேபோல் ஏராளமான இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகளும் பூங்கா சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் உழவர்சந்தை அருகே தொடர்மழைக்கு ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்