சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி ரோட்டில் இருந்து ஜான்சன்பேட்டை செல்லும் வழியில் ரோடு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிஷோர், சேலம்.