நோயாளிகள் அவதி

Update: 2022-10-26 10:59 GMT

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள தார்சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கள்ளாகி வருகின்றனர். எனவே, நோயாளிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி

மேலும் செய்திகள்