கடமலைக்குண்டுவில், தேனி-வருசநாடு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.