மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சியில் அக்ரகா ரம் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக பழைய சாலை தோண்டப்பட்டுள்ளது. இதனால் முக்கிய வீதியான இந்த தெரு பள்ளமாகவும் மழைநீர் தேங்கி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனவே விரைவாக இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.