நாமக்கல் நகரின் மைய பகுதியில் உள்ள பஸ் நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் டவுன் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழையும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பஸ்களின் டயர்கள் இந்த பள்ளத்தில் ஏறி, இறங்கும் போது உதிரி பாகங்கள் பழுதாகி வருகிறது. எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.