சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-16 10:04 GMT

பேச்சிப்பாறை அருகே உள்ள வலியஏலா, சிற்றார், மைலார், கோதையார், குற்றியார், கிளவியார், கல்லார் போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. இதனால், அந்த பகுதி மக்கள் நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சாலை சரியில்லாததால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சக்தி, குற்றியார்.


மேலும் செய்திகள்