குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-19 17:16 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சப்பையாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உடைந்த காவிரி குடிநீர் குழாயை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. இந்த குழியை மூடிய பிறகும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சிதா, அலவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்