மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நின்று சேறும் ,சகதியுமாக காட்சியளிக்கிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மன்னார்குடி