காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி நெடுஞ்சாலை ஆதனூர் பகுதியில் சாலையில் மாடுகள் ஒய்யாரமாக படுத்துக்கிடப்பதும், நின்று இளைப்பாறுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. உரியமையாளர்கள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. சாலையின் நடுவே கால்நடைகள் இவ்வாறு இடையூறு செய்வதால் வாகன ஓட்டிகளுக்கும் பெரிதும் சிரமமாக உள்ளது. விபத்துக்கள் ஏற்படும் முன்பு கவனிக்கப்படுமா?