ஈரோடு சம்பத்நகர் ராணி வீதியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்களாகியும் குழி இன்னும் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறாக உள்ளது. தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.