அந்தியூர் பகுதியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட மண், கெட்டி விநாயகர் கோவில் அருகே உள்ள ரோட்டின் இருபுறங்களிலும் கொட்டப்பட்டு குவியலாக கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில் மண் படுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள மண் குவியல்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.