கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலை வரை உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.. சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி. விபத்துகள் நடந்து வருவது தொடர்கதையாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.