வேகத்தடை அவசியம்

Update: 2022-10-12 16:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எச்சம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த நெடுஞ்சாலையை கடந்து தான் செல்லவேண்டும். இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கூடத்துக்கு வடக்கு, தெற்கு இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சி.பொன்னுசாமி, எச்சம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்