ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட கடவுள் நகர் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு செல்லும் சாலையில், மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையின் நடுவே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும்
-சி.ராமாஞ்சி, ஓசூர்.