வாகனஓட்டிகள் அவதி

Update: 2022-10-12 16:32 GMT

புதிய பஸ்நிலையத்தில் இருந்து முனிசிபல் காலனி, தென்றல் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் இருந்து முனிசிபல் காலனிக்கு செல்லும் பிரதான சாலையில் நீண்ட நாட்களாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் ஒரு புறம் முழுவதும் மணலும், கற்களும் கிடப்பதால் சாலையின் ஒரு புறமாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. இதன்காரணமாக சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், தஞ்சாவூர். 

மேலும் செய்திகள்