இருளில் மூழ்கி கிடக்கும் சாலை

Update: 2022-10-12 16:29 GMT

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் முத்துபேட்டை சாலையிலிருந்து மதுக்கூர் சாலைக்கு செல்லும் ராஜாமடம் வாய்க்கால் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் போதிய தெருவிளக்கு வசதியில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக மோட்டார்சைக்கிளில் செல்வோர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்