தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி அருகே முத்துப்பேட்டை சாலை 2-வது சந்து திரும்பும் இடத்தில் சாலை நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?