திருச்சி மாவட்டம், திருவெள்ளறை கிராமத்தில் இருந்து தாமரைகுளம் வழியாக திருச்சி துறையூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வதற்கே மிகவும் மோசமாக சாலை உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.