நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளத்துக்கு செல்லும் சாலை உள்ளது. ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளதால் இந்த சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால், சாலையில் வாகனங்கள் வரும் போது திடீரென மாடுகள் குறுக்கே செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.பிரபு, ஆசாரிபள்ளம்